“Google Online Marketing challenge 2011 ” போட்டி நிகழ்ச்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. சந்தைப்படுத்தல் துறையில் ஆர்வமுள்ள உயர்கல்வியை தொடரும் மாணவர்கள் இந்த போட்டி நிகழ்ச்சியில் பங்கு கொள்ளலாம். கடந்த வருடம் இடம்பெற்ற போட்டியில் 60 நாடுகளிலிருந்து 12000 க்கு மேலான மாணவர்கள் பங்குகொண்டிருந்தார்கள் எனவும் இந்த வருடம் இதற்கும் அதிகமான மாணவர்களை எதிர்பார்ப்பதாகவும் கூகிள் தெரிவித்துள்ளது.
google marketing challenge
உயர்கல்வியை தொடரும் எந்த துறைச் சேர்ந்த மாணவர்களும் இந்த போட்டியில் பங்குகொள்ளலாம். குழுக்களாகவே இந்தப் போட்டியில் பங்கு கொள்ள வேண்டும். ஒரு குழுவில் 3 தொடக்கம் 6 வரையான மாணவர்கள் பங்கு கொள்ள முடியும். பதிவுகளுக்கான இறுதித் திகதி January 14, 2011 ஆகும்.
இது தொடர்பான முழுமையான தகவலினை கூகிளின் வலைப்பதிவில் காணவும். இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் எத்திவையுங்கள்.